First News

இஸ்லாமிய ஆய்வுக்கான இப்னு குதாமா நிறுவகத்தின் பணிப்பாளராகச் செயற்படும் இவர், பல சமூக சேவைச் செயற்பாடுகளையும் மேற் கொண்டுள்ளார். அவ்வப்போது சமூகம் எதிர்கொள்ளும் அரசியல், ஆன்மிகப் பிரச்சினைகள் தொடர்பாக ஜூம்ஆ சொற்பொழிவுகள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றார். இஸ்லாமியப் பிரசாரப் பணியில் ஆர்வமும் ஈடுபாடும் உடைய இவரின் கன்னி முயற்சியாக இந்த நூல் வெளிவருகிறது. இது, அறிவு சார்ந்த ஆன்மிக வாழ்வியல் ஒழுங்கையும்; ஒழுக்க நெறியைக் கடைப்பிடிப்பதனால் ஏற்படும் இகபர இன்பங்கள் பற்றியும் வலியுறுத்திப் பேசுகிறது. மனித வாழ்வு ஒழுக்க விழுமியத்தால் மேம்பட வேண்டும் என்பதை அல்குர்ஆன் – அல் ஹதீஸ் நிழலில் தலைப்புகளுக்கு ஏற்ற ஆதரவான சில அறிஞர்கள் கருத்துக்களையும் ஒன்றிணைத்து காலத்துக்கு ஏற்ற வகையில் சமகாலப் பிரச்சினைகளான * முஸ்லிம் சமூகத்தில் நிலவும் தலைமைத்துவ வெற்றிடம். * போதைப் பொருள் பாவனை, * பாலியல் துஷ்பிரயோகம், * தற்கொலை முயற்சி, * மன அழுத்தம், * வறுமைப் பிரச்சினை * ஆன்மிக வறுமை எனப் பல சமூகப் பிரச்சினைகள் பற்றி தற்கால மொழி நடையில் எளிய தமிழில, ஒரு சாதாரண வாசகனும் புரியும் வகையில் நூலாசிரியர் விடயங்களைப் பேசுகின்றார். * ஒரு மவ்லவித்துமான எழுத்து நடையிலிருந்து இந்த நூல் முற்றிலும் வேறுபட்டுச் செல்கிறது. * இதன் மொழி நடை வரவேற்றத் தக்கதாக உள்ளது. * நூலில் விடயங்களை முன்வைக்கும் நடைப் பாங்கு முன்னேற்றகரமானதாகக் காணப்படுகிறது. * ஒப்பீட்டளவில் மிகக் குறைந்த எழுத்துப் பிழைகளே காணப்படுகின்றன. * நிறுத்தக்குறிகள் பெருமளவு சரியாக உள்ளன. சிற்சில இடங்களைத் தவிர. * எழுத்துப் பிழைகள் வராமல், சரவை பார்ப்பதில் கூடிய கவனம் செலுத்தப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது. * இலக்கண ஒழுங்குகள் அதிகம் கவனிக்கப்பட்டுள்ளன. * பல்வேறு இயக்கச் சிந்தனை முகாம்களின் எழுத்துக்களை வாசித்துள்ளார். அதன் தாக்கம் நூலில் வெளிப்படுகிறது. முன்னுரையில் அது பற்றிப் பேசியுள்ளார். * நூலாசிரியரின் மொழி நடை பழைமைத்துவ சிந்தனை மரபிலிருந்து முற்றிலும் மாறுபட்ட, சுவாரஸ்ய வாசிப்பார்வத்தை ஏற்படுத்துமாப் போல் உள்ளது. இவ்வாறு மொழி நடை காணப்படும் போது ரசித்து வாசிப்பார்கள். * இதை மற்றவர்களும் பயன்படுத்ததலாம் என்பது எனது கருத்து. * எழுத்தர் பின்பற்ற வேண்டிய சில நெறி முறைகள் உள்ளன. அந்த நெறி முறைகளைப் பின்பற்றினால், எழுத்துச் சீராகவும் கருத்தை வெளிப்படுத்தும் பாங்கு தெளிவாகவும் இருக்கும். நூலின் சாரம்சம் பற்றிய கருத்துக்கள் மதிப்புரை, அணிந்துரை, முன்னுரை ஆகியவைகளில் பொதுவாகப் பேசப்பட்டுள்ளன. Overall ஆக இது ஒழுக்க விழுமியம் பற்றிப் பேசும் ஒரு நூல் என்பதை வாசகனால் இலகுவாகப் புரிந்து கொள்ள முடியும். இதுவரை தமிழில் குறிப்பாக இலங்கையில் தனி ஒரு ஹதீஸை மையப் பொருளாகக் கொண்டு நூல் வெளிவந்ததாக அறிய முடியவில்லை. அந்த வகையில் ஒழுக்கப் பெறுமானத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் 7 முக்கிய அம்சங்கள் பொருந்திய பின்வரும் ஹதீஸை விளக்கி, அதனை ஒரு தனி நூலாக எழுதி வெளியிட்டுள்ளார். سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله، إمام عادل، وشاب نشأ في عبادة الله، ورجل قلبه معلق بالمسجد إذا خرج منه حتى يعود إليه، ورجلان تحابا في الله اجتمعا على ذلك وافترقا عليه، ورجل ذكر الله خالياً ففاضت عيناه، ورجل دعته امرأة ذات منصب وجمال فقال: إني أخاف الله رب العالمين، ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه ‘ رواه البخاري அர்ஷின் நிழல் பெறுவோர் பற்றிப் பேசும் இந்த நபிமொழியை கருப் பொருளாகக் கொண்டு பின்வரும் தலைப்புகளில் 7 இயல்களில் விரிவாக ஆராய்ந்துள்ளார். 01.நீதியான தலைவன் 02. இளமையை இபாதத்தில் கழித்த இளைஞன் 03. மஸ்ஜிதுடன் இதயப்பூர்வமாக உறவு வைத்திருந்த மனிதன் 04. அல்லாஹ்வுக்காக இணைந்து பிரிந்த நண்பர்கள் 05. கற்பொழுக்கம் பேணிய மனிதன் 06. உளத்தூய்மையுடன் தர்மம் செய்தவன் 07. அல்லாஹ்வை தனிமையில் சிந்தித்து கண்ணீர் சிந்தியவன் ‘தனிநபர்களிடம் காணப்படும் பிழையான பண்புகளைக் களைந்து, சரியான பண்பாடுகளின்பால் அவர்களை வழிகாட்டி, மானுடப் பெறுமானங்களை உறுதிப்படுத்தும் போதுதான் ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்கலாம். இஸ்லாமிய வணக்க வழிபாடுகள் இதற்கு அடித்தளமிடுகின்றன. தனிமனிதனின் சுய சீர்திருத்தம், குடும்ப மேம்பாடு, சமூக முன்னேற்றம், நாட்டின் வளர்ச்சி, பூகோள அபிவிருத்தி என அனைத்திலும் ஒரு மனிதனை, குறிப்பாக ஒரு முஸ்லிமை இயக்குவிக்கும் ஆற்றலை இறைவிசுவாசமும் இறைவழிபாடும் பெற்றுள்ளன. ஒரு தனிமனிதனை தனது சமூகத்துக்கும் தனது தேசத்துக்கும் முன்மாதிரிப் பிரஜையாக மாற்றுவதில் பின்;னணியாக ஈமான் தொழிற்படுவது போன்று, இபாதத்களும் உந்து சக்தியாகத் திகழ்கின்றன’ என்று மதிப்புரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
All rights reserved By International Moon Sighting Committee.

Developed By Hidhas Mohamed